வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்... உழவர் சந்தைகளை புதுப்பிக்க திட்டம். அடுத்த அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 7, 2021, 3:53 PM IST
Highlights

அதோடு, உழவர் சந்தைகளை புதுபிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. தற்போது  தமிழ்நாட்டில் 180 உழவர் சந்தைகள் உள்ளதாகவும், 96 உழவர் சந்தைகள் மட்டும்  செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. 

உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்து  பேரூராட்சி பகுதிகளில் அதை விரிவுபடுத்துவதற்கான பணிகளை வேளாண்மை துறை தீவிரப்படுத்தியுள்ளது.சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டுவந்த உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வேளாண்மைத்துறைக்கு தனிநிதிநிலை  அறிக்கையை தயார் செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. 

அதோடு, உழவர் சந்தைகளை புதுபிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. தற்போது  தமிழ்நாட்டில் 180 உழவர் சந்தைகள் உள்ளதாகவும், 96 உழவர் சந்தைகள் மட்டும்  செயல்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட அளவில் மட்டுமல்லாது பேரூராட்சி அளவிலும் உழவர் சந்தையை விரிவுபடுத்தவும், வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது. மேலும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகள் நலனுக்காகவும், தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் உரையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் துறை சார் நிபுணர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.இதைதொடர்ந்து அமைச்சர் தலைமையில் விவசாயிகள், விவசாய சங்கத்தினர்  ஆகியோருடனும் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் பெறும் கருத்துகள், புதிய திட்டங்கள் தொடர்பான தவல்களை  முதலமைச்சரோடு ஆலோசித்து,  வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவதோடு,  அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!