இன்றைக்கு இடைத் தேர்தல் நடப்பதற்கு டி.டி.வி.தினகரனின் பேராசைதான் காரணம் !! வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி !!

Published : May 04, 2019, 11:29 PM IST
இன்றைக்கு இடைத் தேர்தல் நடப்பதற்கு டி.டி.வி.தினகரனின் பேராசைதான் காரணம் !! வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி !!

சுருக்கம்

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின்  பதவி பறிக்கப்பட்டதற்கும், இன்றைக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கும் தினகரனின்  பேராசைதான் காரணம் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக செய்ல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களின் பதவியை சபாநாயகர் தனிபால் பறித்தார். சென்னை உயர்நீதிமன்றமும்  பதவி பறிப்பை உறுதி செய்தது, இதையடுத்து அந்த தொகுதிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப் பிடாரம் ஆகிய தொகுதிமகளில் வரும் 19 ஆம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்போது தினகரனன் அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்பாளையம் கிராமத்தில்  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது  செய்தியாளர்களை சந்தித்த அவர், 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என குற்றம் சாட்டினார். தோல்வியின் உச்சத்தில் இருக்கும் ஆளும் கட்சியினரும், தினகரனும் பிரச்சாரக் களத்தில் என் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் ஸ்டாலினால் மட்டுமே, தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!