எனக்காக கைகட்டி காத்து நின்னவர்தான் தம்பிதுரை... வெளுத்துக்கட்டும் செந்தில்பாலாஜி..!

By vinoth kumarFirst Published Nov 10, 2018, 3:22 PM IST
Highlights

இடைத்தேர்தல் வைபரேஷன் நெருங்க, நெருங்க அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இடையில் உரசலும், உறுமலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக தம்பி துரை மற்றும் செந்தில்பாலாஜி இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் எங்கு சென்று நிற்குமோ புரியவில்லை.

இடைத்தேர்தல் வைபரேஷன் நெருங்க, நெருங்க அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இடையில் உரசலும், உறுமலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக தம்பி துரை மற்றும் செந்தில்பாலாஜி இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் எங்கு சென்று நிற்குமோ புரியவில்லை.  

கரூர் எம்.பி.யும், துணை சபாநாயகருமான தம்பிதுரை கடந்த சில நாட்களாகவே புரட்சியாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஜே.பி.யை விமர்சித்துக் கொட்டும் அவர், தி.மு.க.வை தாளித்துக் கொட்ட தவறவில்லை. அதேவேளையில் தினகரன் அணியையும் திட்டி திணறவிடுகிறார். அதிலும் தன் சொந்தமாவட்டத்தில் தன் அரசியல் ஜூனியரான செந்தில் பாலாஜியை சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் செதுக்கித் தள்ளுகிறார் சுடு வார்த்தைகளால். தம்பிதுரை பற்றி செந்தில் வைத்த விமர்சனத்துக்கு அவரிடம் பதில் கேட்டபோது ‘செந்தில் பாலாஜிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.’ என்று மிக அலட்சியமாக அவர் பேசியது பாலாஜியின் வட்டாரத்தை கடுப்பேற்றிவிட்டது. 

இதற்கு பதிலடி தந்திருக்கும் செந்தில்பாலாஜி ”என்னைப் பற்றி பேசுவதற்கு, தம்பிதுரைக்கெல்லாம் என்ன இருக்கிறது? போன பாராளுமன்ற தேர்தலின்போது அவரையெல்லாம் ஊருக்குள்ளேயே அனுமதிக்க மறுத்துட்டாங்க கரூர் தொகுதியில. எவ்வளவு கெஞ்சியும் மக்கள் கேட்கல. அப்புறம் நான் தான் அவரை அழைச்சுட்டு போனேன். நானில்லைன்னா தொகுதிக்குள்ளேயே கால் வெச்சிருக்க முடியாது அவரால. 

வெற்றி பெற்ற தொகுதிக்கு எதையும் பண்ணல மனுஷன். இப்படியொரு மனுஷனை பிரச்சாரத்துக்கு அழைச்சுட்டு வந்ததற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் நான். எனக்கு பதில் சொல்லாம வேற யாருக்கு பதில் சொல்வாராம்? என்னுடைய ராமேஸ்வரப்பட்டி பூத்துல நான் ஓட்டுப்போட வரும் வரை கைகட்டி காத்துக் கிடந்த மனுஷன் தான் தம்பிதுரை. காரியம் ஆகணும் அப்படின்னா எதையும் பேசக்கூடியவர், எதையும் செய்யவும்  கூடியவர் இவரு.” வெளுத்திருக்கிறார் செந்தில். 

தம்பிதுரையை மட்டுமில்லாது, ஒரு காலத்தில் தனது ஜூனியராக இருந்து இப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கரையும் டாப்கியரில் தாளித்திருக்கிறார் பாலாஜி. ‘தைரியமுன்னு ஒண்ணு இருந்தால், தன்னோட பதவியை ராஜினாமா பண்ணிட்டு, எனக்கெதிரா அரவக்குறிச்சியில் நின்னு, ஜெயிக்க தயாரா விஜயபாஸ்கர்?’என்று வம்பிழுத்திருக்கிறார். தேர்தல் முடியும் வரை இவங்க சத்தம் ஓயாது போல!

click me!