மக்கள் பிரதிநிதிகளைத் துரத்தும் கொரோனா..திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் கொரோனா... திருச்சியில் அட்மிட்..!!

Published : Aug 18, 2020, 09:08 PM ISTUpdated : Aug 18, 2020, 09:10 PM IST
மக்கள் பிரதிநிதிகளைத் துரத்தும் கொரோனா..திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் கொரோனா... திருச்சியில் அட்மிட்..!!

சுருக்கம்

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸார் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அதேபோல தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். திமுக. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதேபோல திமுகவிலும் 15 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்களையும் தமிழகத்தில் 33 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!