கோடை விடுமுறைக்கு பின்னர் செங்கோட்டையன் தப்புவாரா? உச்சநீதிமன்றம் கெடு....

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 09:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
கோடை விடுமுறைக்கு பின்னர் செங்கோட்டையன் தப்புவாரா? உச்சநீதிமன்றம் கெடு....

சுருக்கம்

sengottaiyan release after vaccation - court deadline

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்தநாளின் போது 2 கோடி ரூபாய் பரிசாக வாங்கிய வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது. செங்கோட்டையன் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1992 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா தனது பிறந்த நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாடினார். அப்போது, கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவிற்கு பரிசு பொருட்களாகவும், ரொக்க காசோலையாகவும் வழங்கினர்.

அதன் ஒருபகுதியாக 2 கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவருக்கு கேட்பு பரிசு தொகையாக வழங்கப்பட்டது. முதலமைச்சர் பதவில் இருக்கும் போது யாரேனும் பரிசு தொகையாக அதிக பணம் கொடுத்தால் அதை அரசு கஜானாவில் வைக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் ஜெயலலிதா அதை தனது சொந்த கணக்கில் வைத்து கொண்டார். இது தொடர்பாக ஜெயலலிதா, அழகு திருநாவுகரசர், செங்கோட்டையன் மீது சி.பி.ஐ போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காலம் கடந்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அழகு திருநாவுகரசர் இறந்துவிட்டதால் அவர்கள் இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மேலும் செங்கோட்டையன் மீதான வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், நாரிமன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்