பழைய பேப்பரை பார்த்து பதறிப்போன திருநாவுக்கரசர்... இந்தியன் 2 வாழ்த்து சொல்வார்களா ஜெயக்குமாரும் ராஜேந்திரபாலாஜியும்...

By sathish kFirst Published Jan 16, 2019, 9:44 PM IST
Highlights

விறுவிறுவென படப்பிடிப்பு துவங்குவதால், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கமல்ஹாசன் சினிமாவில் பிஸியாகிறார்!: செய்தி.

*    இந்தியன் 2 பட ஷூட்டிங் இன்னும் இரண்டு நாட்களில் துவங்குகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. விறுவிறுவென படப்பிடிப்பு துவங்குவதால், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கமல்ஹாசன் சினிமாவில் பிஸியாகிறார்!: செய்தி.

(ஒலக நாயகன் மீண்டும் மேக் - அப் போடும் நிலையில், இந்த நிகழ்வு குறித்து அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமாரு மற்றும் ராசேந்திர பாலாஜி இருவரின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.)

*    எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது . எப்போதும் எங்களின் நடவடிக்கைகளும், வார்த்தைகளும் எப்போதும் மக்களுக்கு ஆதரவாகவே இருக்கும்: நரேந்திர மோடி.

(ஆமாண்ணே, அதான் தெரியுமே! பிளாக் மணியை பிடிச்சு, கழுவி ஒயிட்டாக்கி ஒவ்வொருத்தன் கையிலேயும் பதினஞ்சு லட்சம் தர்றேன்னு நீங்க சொன்னது அப்படியே தெளிவா நடந்துச்சே!)

*    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இதற்காக அ.தி.மு.க.வை பல வகையிலும் மிரட்டி வருகிறாது. அமைச்சர்களின் வீடுகளில், சி.பி.ஐ. சோதனை நடத்தி அவர்களை மிரட்டுகிறது: திருநாவுக்கரசர்

(அப்புறம் அரசரண்ணே செம்ம தூக்கம் தூங்கி முழிச்சிட்டீங்க போல இருக்கே. ஒரு வருஷத்துக்கு முன்னாடி உள்ள பேப்பரை இப்பதான் வாசிச்சுட்டு பதறிப்போயி பேட்டி கொடுக்க வர்றீங்க போல! சரி சரி போயி காப்பிய குடிங்க.)

*    மோடியின் மனதில் இப்போது அச்சப் புயல் வீசுகிறது. அவரால் இப்போது தூங்க முடியாது: ராகுல் காந்தி. 

(அவருக்காச்சும் புயல். ஒங்களுக்கு பூகம்பமே நடக்குதே தம்பி! இந்த தேர்தல்லேயும் விட்டோம்னா தொடர்ந்து பத்து வருஷம் பதவி பக்கமே போக முடியாததால பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆகிடும் உங்க ஆளுங்களுக்கு. ஏற்கனவே எல்லாரும் சீனியர் சிட்டிசன்ஸ் வேற!)

*    ராகுலுக்கு பெரிய வரவேற்பு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்குள்ளே கூட அவருக்கு வரவேற்பு இல்ல!: தமிழிசை 

(யக்கா ராகுல் கதை இருக்கட்டும். அப்படியே கொஞ்சம் திரும்பி பாருங்க, ஒத்தையா நின்னு பேட்டி கொடுத்துனு இருக்கீங்க. தலைவியானதுல இருந்தே உங்களுக்கு உங்க கட்சியிலேயே ஒத்துழைப்பு இல்லைங்கிறதை எங்க போயி சொல்றதாம்?)

click me!