அரசியலில் என் மகள்கள்... பொள்ளாச்சியில் பொறி பறக்க பேசிய ஆண்டவர்!

Published : Jan 16, 2019, 08:27 PM IST
அரசியலில் என் மகள்கள்... பொள்ளாச்சியில் பொறி பறக்க பேசிய  ஆண்டவர்!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் - கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்களாக கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்கிறார். அங்கே மக்களை சந்தித்து பேசுவது, தன் கட்சியின்  மேற்கு மண்டல தலைமை அலுவலகத்தை திறப்பது என்று மனிதர் ஏக பிஸி!

இன்று பிற்பகல் பொள்ளாச்சியில் அவரது கட்சி  சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய கமல்ஹாசன், ஆளுங்கட்சியையும் மற்றும் இன்னபிற கட்சி அரசியல்வாதிகளையும் வெளுத்துக் கட்டிவிட்டார் வழக்கம்போல. 

அதன்பிறகு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென்று, ‘ என் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் இந்த கட்சியின் தலைவர்களாக வந்து உட்காரவே மாட்டார்கள். வாரிசு நிர்வாகம் நிச்சயம் கிடையாது. உறுதியாக சொல்கிறேன். இது என் கட்சியில்லை, உங்கள் கட்சி. 

நம்மவர்! நம்மவர்! என்று நீங்கள் என்னைப் பார்த்து சொல்கிறீர்கள். நானோ உங்களை ‘நம்மவர்’ என்கிறேன். நம்மவரென்றால் நாம் எல்லாரும் சேர்ந்துதான். இங்கே எதுவுமே சரியில்லை,  எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. 

ராமருக்கு அணில்களாக நாம் இருந்த காலமெல்லாம் போதும், இனி வில்லெடுத்து வேட்டையாட துவங்குவோம்.” என்று பொளந்து கட்டியிருக்கிறார் மனிதர். 

ஒலக நாயகன்னா ச்சும்மா ஸ்க்ரீன்ல சீன் போட்டுட்டு போவாருன்னு நினைச்சீங்களா!...சிங்கம்டா! என்று சிலிர்க்கிறார்கள் அவரது தொண்டர்கள்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!