இப்படி மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர்... வேதனையில் செந்தில் பாலாஜி!

By sathish kFirst Published May 19, 2019, 11:28 AM IST
Highlights

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர் என அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது. மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர் என அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தேர்தல் பணிமனைகளை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் அகற்றி வருவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி திருச்சி மண்டல துணைத் தலைவர் லலிதா லட்சுமி முறையீடு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  செந்தில் பாலாஜி; அரவக்குறிச்சி தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஆளுங் கட்சியின் நிர்வாகிகள் போல செயல்பட்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடி மையத்தின்  200 மீட்டர் தொலைவில் தற்காலிக பந்தல் அமைத்து கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இல்லாமல் தேர்தல் பணியாற்றலாம் என்ற விதிமுறையை ஆளுங்கட்சியினர் மீறி தலைவர்களின் புகைப்படங்களை பெரிதாக அச்சிட்டு வைத்துள்ளனர்.

ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு திமுகவினர் அமைத்துள்ள உதயசூரியன் சின்னம் பொருந்திய பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். தற்பொழுது இங்கு வருகை தந்த காவல்துறை திருச்சி மண்டல துணைத் தலைவர் அவர்களிடம் இது குறித்து விதிமுறையை காட்டி பேசினேன்.

இதுகுறித்து, திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். நிச்சயம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர் இப்படி மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் செயல்படுகின்றனர் என செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

click me!