தமிழ்நாட்டுக்கு உடனே அதை அனுப்பி வையுங்கள்... ஒரே நாளில் கனிமொழி எழுதிய 3 கடிதங்கள்..!

By Selva KathirFirst Published May 21, 2021, 10:36 AM IST
Highlights

தமிழ்நாட்டில் கரும் பூஞ்சை நோய் ஒன்பது பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி ஒரே நாளில் மத்திய அரசுக்கு மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரும் பூஞ்சை நோய் ஒன்பது பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி ஒரே நாளில் மத்திய அரசுக்கு மூன்று கடிதங்களை எழுதியுள்ளார்.

மத்திய உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் மற்றும் உரத்துறை செயலாளர் அபர்னா ஆகியோருக்கு இமெயில் மூலம் கனிமொழி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கரும் பூஞ்சை நோய் அதிகரித்து வருவதை தாங்கள் அறிவீர்கள். அதிலும் குறிப்பாக கொரோனா தொற்றில் இருந்து குணமாகும் நபர்களை இந்த நோய் தாக்கி வருகிறது. கொரோனா 2வது அலையின் போது மற்றொரு பெருந்தொற்றாக கரும்பூஞ்சை நோய் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் அரசு ஏற்கனவே கரும்பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவித்துவிட்டது.

கரும்பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் லிபோசோமல் ஆம்போடெரிச் எனும் மருந்துக்கு நாடு முழுவதும் தற்போது தேவை அதிகரித்து இருப்பு குறைய ஆரம்பித்துள்ளது. மேலும்ந டு முழுவதும் இந்த மருந்தை பெறுவது தற்போது கடினமான நிலையை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் தற்போது நாடு முழுவதும் இந்த மருந்து மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே நாடு முழுவதும் இந்த மருந்து விநியோகத்தை அதிகரிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் இந்த மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதால் போதுமான அளவிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அதோடு மட்டும் அல்லாமல் இந்த மருந்து உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி மருந்து நிறுவனங்களுக்கு கிடைப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் கரும்பூஞ்சை மருந்து தயாரிப்பதற்கு இருக்கும் இடையூறுகள் களையப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கனிமொழி கூறியுள்ளார். இந்த கடிதத்தை எம்பியாக மட்டும் அல்லாமல் உரத்துறைக்கான நிலைக்குழுவின் தலைவராகவும் எழுதியுள்ளதாக கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே கொரோனாவுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதற்கு காரணம் தமிழக அரசு முன்கூட்டியே சுதாகரிக்காதது  தான். ஆனால் தற்போது கரும் பூஞ்சை தென்படத் தொடங்கிய நிலையிலேயே தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் அதனை குணப்படுத்தும் மருந்து கிடைப்பதற்கான வழிமுறைகளை கூறி நடவடிக்கை கோரியுள்ள கனிமொழியின் கடிதம் நிச்சயம் தமிழகத்திற்கு தேவையான மருந்துகளை பெற்றுத்தரும் என்று நம்பலாம்.

click me!