ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ் சசிகலா இடையே இருந்த அதிகாரப் போட்டி அக்கட்சியை இரண்டாக பிளவுபட்டுபோயுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பிரச்சனை தோன்றியது. பின்னர் ஓபிஎஸ் ராஜினாமா செய்து, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து போர்க்கொடி உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி,முனுசாமி,பாண்டியராஜன், 12 எம்பிக்கள், 11 எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஐ ஆதரித்தனர்.
இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக மதுசூதனன் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சசிகலா கட்சியிலிருந்து நீக்கினார்.
இதைத் தொடர்ந்து பதிலடியாக சசிகலாஇ தினகரன், டாக்டர் வெங்கடேஷ், முதலமைச்சர் எடப்பாடி,அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜய பாஸ்கர், உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்