"நாங்கள் எப்ப பதில் சொன்னால் என்ன ?" - திருநாவுக்கரசர் எரிச்சல்

 
Published : Feb 18, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
"நாங்கள் எப்ப பதில் சொன்னால் என்ன ?" - திருநாவுக்கரசர் எரிச்சல்

சுருக்கம்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்ட முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் ஏன் இவ்வளவு தாமதமாக அறிவிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கோபப்பட்டு எரிந்து விழுந்தார்.

எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்ததற்கு  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தரவில்லை. ஆரம்பத்திலேயே திமுக தனது ஆதரவு இல்லை எதிர்த்து வாக்களிப்போம் என்று கூறிவிட்டது. .

இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் ஏன் இந்த பதிலை அளிக்க இத்தனை கூட்டம் இவ்வளவு தாமதம் என்று கேட்டனர். அதற்கு எரிச்சலாக பதிலளித்த திருநாவுக்கரசர் ஏங்க நீங்க கேட்கும் போது பதில் சொல்லணும்னு என்ன அவசியம். 

எப்போது வேண்டுமானாலும் யோசித்து சொல்வோம் . இது காங்கிரஸ் பேரியக்கம். டெல்லி மேலிடம் கூடி அவர்கள் சொல்லும் முடிவை சொல்கிறோம் , என்று முகுல் வாஸ்னிக் அறிவித்ததை குத்தி காட்டி பேசினார்.

எடப்பாடி தோற்றுப்போனால் என்ன ஆகும்? உங்கள் கருத்து என்ன  என்று கேட்ட போது மீண்டும் கோபப்பட்ட திருநாவுக்கரசர் ஏங்க நான் ஹேஷ்யம் எல்லாம் சொல்ல முடியாது தேர்தல் நடக்கும் அப்போது பாருங்கள் என்னிடம் ஜோஷியம் கேட்காதீர்கள் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு