பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தொடங்கியது..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2020, 11:24 AM IST
Highlights

கேமிரா அல்லது செல்போன் முன்பக்க கேமிரா முன்னதாக மாணவர்கள் தேர்வு எழுதுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் இந்த கேமிரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் தொடங்கியது.கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. முதன் முறையாக
ஆன்லைன் முறையில் நடைபெறும் இத்தேர்வு ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாள் ஒன்றிற்கு 4 சுற்றுகளாக செமஸ்டர் தேர்வுகள்  நடைபெறுகிறது. இதற்காக கேள்வித்தாளும் குறைக்கப்பட்டுள்ளது. கல்லூரி காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதால் தேர்வு நேரமும், கேள்விகளும் குறைக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் ஆப்சன் (MCQ) முறையில் எளிமையான முறையில் கேள்வித்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதில் அளிப்பது எளிமை. நான்கு  விடைகளில் சரியான ஒன்றை தெரிவு செய்தால் போதும். 

இந்த ஆன்லைன் தேர்வுக்கான மாதிரி தேர்வு கடந்த 19,20 மற்றும் 21ம் தேதி நடைப்பெற்றது. இன்று முறைப்படி செமஸ்டர் தேர்வுகள் துவங்கப்பட்டுள்ளது. வெப் கேமிரா அல்லது செல்போன் முன்பக்க கேமிரா முன்னதாக மாணவர்கள் தேர்வு எழுதுவது கட்டாயப்படுத்த ப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் இந்த கேமிரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!