தமிழக சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியை தட்டித் தூக்கிய செல்வபெருந்தகை... குமரிக்காரர்களுக்கு அல்வா..!

By Asianet TamilFirst Published May 23, 2021, 9:52 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்றுவிட்ட நிலையில், அந்தக் கட்சி சார்பில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் அக்கட்சி திணறியது. பாமக., பாஜக., கம்யூனிஸ்ட், மதிமுக., விசிக போன்ற கட்சிகள் கூட தலைவர், துணைத் தலைவர், கொறடா என அறிவித்துவிட்டன. ஆனால், காங்கிரஸில் வழக்கம்போல ஏற்பட்ட போட்டாபோட்டி காரணமாக தலைவரை அக்கட்சியால் அறிவிக்க முடியவில்லை. 
தலைவரைத் தேர்வு செய்ய கடந்த 17 அன்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் இடையே வாக்கெடுப்பு நடைபெற்றதாக தகவல் வெளியானது. இந்தப் போட்டியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயதாரணி, ராஜேஷ்குமார் ஆகியரோடு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வபெருந்தகையும் போட்டியில் இருந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் கு.செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் " எனத் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கோடு இருப்பதால், கன்னியாகுமரியைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வட மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 

click me!