இது என்ன துக்ளக் ஆட்சியா? திமுக அரசை லெஃப்ட் ரைட் வாங்கும் செல்லூர் ராஜூ..!

By vinoth kumarFirst Published Jun 10, 2021, 6:30 PM IST
Highlights

ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் அமைச்சராக உள்ளார். அந்த துறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனவெறுப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எங்களுடைய ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இப்போது 5 லட்சம் கொடுப்பது ஏன்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- கொரோனாவால் தற்போதும் அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது. தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வமாக இருந்தாலும், எப்போது தடுப்பூசி கிடைக்கும் என ஆட்சியர்களுக்கும் தெரியவில்லை. மக்களுக்கும் தெரியவில்லை.

மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போடவந்து ஏமாந்து செல்கின்றனர். மக்களை அலையவிடுவது கண்டனத்துக்குரியது. தடுப்பூசி குறித்த சரியான அறிவிப்புகளை மாநில அரசு வெளியிடவில்லை. இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கான தடுப்பூசியூம் இல்லை. முதல் டோஸ் தடுப்பூசியும் இல்லை. முதல்வர் முகக்கவசம் எப்படி போடுவது என அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். ஒருவருடத்திற்கு முன்பே முகக்கவசம் போட மக்களுக்குத் தெரியும். தடுப்பூசி வாங்குவதில் சாணக்கியத்தனமாக செயல்படவேண்டும்.

கொரோகாவால் இறந்தவர்களுக்கு பிரதமர் பத்து லட்சம் அறிவித்தார். முதல்வர் ஐந்து லட்சம் அறிவிக்கிறார். ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என சொன்னவர் ஸ்டாலின். ஆனால், தற்போது கொரோனாவால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்க மறுக்கின்றனர். என் தொகுதியிலேயே நிறைய பேருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுக்கவில்லை. கொரோனாவால் இறப்பவர்களுக்கு காரணம் போட முடியாது என கூறப்படுகிறது. பிறகு எப்படி அந்த நோயால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியும்.

முன்னாள் டிஎஸ்பி மகன் மறைவுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. டீனிடம் விளக்கம் கேட்டதற்கு, முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இது என்ன துக்ளக் ஆட்சியா? ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் அமைச்சராக உள்ளார். அந்த துறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனவெறுப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

click me!