அண்ணாமலை என்ன ஆண்டவனே நினைத்தாலும் நடத்த முடியாது..! பாஜக மாநில தலைவருக்கு எதிராக சீறும் செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Apr 10, 2023, 9:08 AM IST

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் அண்ணாமலை என்ன ஆண்டவனே கேட்டாலும் தப்பு தான். ஆண்டவனே நினைத்தாலும் இந்த திட்டத்தை நடத்த முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


இபிஎஸ்யை பிரதமர் சந்திக்காமல் சென்றது ஏன்.?

அதிமுகவினர் சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு படிவங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி  தனிப்பட்ட முறையில் சந்திக்காமல் சென்றது குறித்த கேள்விக்கு பதில அளித்த செல்லூர் ராஜூ, பிரதமர் கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை. அரசு நிகழ்ச்சிக்காக வந்தவர். மரியாதை நிமித்தமாக பார்த்துள்ளார். இதில் பெரிய முக்கியத்துவம் ஒன்றுமில்லையென கூறினார்.

Tap to resize

Latest Videos

அண்ணாமலை என்ன அண்ணாமலை..

மேலும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தான் காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக கூறினார். இதனால் அங்கு கனிமமோ, இராசாயன தொழிலோ தொடங்க முடியாது என தெரிவித்தவர், எனவே  எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த சட்டத்தால் தான் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக கூறினார். டெல்டா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் அமைக்க கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டதால் தான் அந்த திட்டம் திரும்ப பெற்றதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவிட்ட கருத்து குறித்த கேள்விக்கு, அண்ணாமலை என்ன ஆண்டவனே கேட்டாலும் தப்பு தான். ஆண்டவனே கேட்டாலும் இத்திட்டத்தை நடத்த முடியாது. அண்ணாமலை என்ன அண்ணாமலை.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை மீறி செயல்படுத்த முடியாது என தெரிவித்தார்.

பொய்களை கூறி வாக்கு சேகரித்தவர்

நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு தான்  திரும்பெற வைத்ததாக அமைச்சர் உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,  உதயநிதி ஸ்டாலின் எதை தான் சொல்லவில்லை. நீட்டை முதல் கையெழுத்திலேயே ஸ்டாலின் ஒழிப்பார் என்றார்.பொய்களை சொல்லி வாக்குகளை சேகரித்தார்.தற்போது அப்பாவை புகழ்வது தான் உதயநிதியின் வழக்கமாக உள்ளதாக விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழக ஆளுநருக்கு எதிராக இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம்.?

click me!