
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தங்களை உருவாக்கியவர் என்றும், நாங்கள் அனைவரும் உழைத்துப் பிழைப்பவர்கள் என்றும், வயித்துப் பிழைப்புக்காக எதையாவது பேசமாட்டோம் எனவும் டி.டி.வி.தினகரனுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார்.
இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் இருந்து ஜானகி ஒதுங்கிக் கொண்டது போல, தினகரனும் இரட்டை இலை சின்னத்தைப் பெற எண்ணாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சியில் இதற்கு பதில் அளித்த தினகரன் அமைச்சர் வேலுமணியின் இந்த பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும், வேலுமணி தனது வயிற்றுப்பிழைப்புக்காக இது போன்று பேசுவதாகவும், தற்போது வரை அவர் தனது நல்ல நண்பர் என்றும் தினகரன் கூறினார்..
டி.டி.வி.தினகரனின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தங்களை உருவாக்கியவர் என்றும், நாங்கள் அனைவரும் உழைத்துப் பிழைப்பவர்கள் என்றும், வயித்துப் பிழைப்புக்காக எதையாவது பேசமாட்டோம் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் இன்று தலைவர்களாக உருவாகியுள்ளதாகவும் , தாங்கள் எவன் காசிலும் சாப்பிடவில்லை என்றும் செல்லூர் ராஜு மிகக் கடுமையாக பேசினார்