
தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காதரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த், உடல் நலம் தொடர்பாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூர் புறப்படும் முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆர்.கே.நகர்
இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறினார். நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் விஜயகாந்த் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த், பண பலம் உள்ளவர்கள்
தேர்தலில் வெற்றி பெறுவார்கள். முறைகேட்டை தடுக்கவே மாலை 5 மணிக்குமேல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் விதிக்கப்பட்ட பிரச்சார கட்டுப்பாடுகளைப் பணப்பட்டுவாடா செய்பவர்களே விமர்சிப்பார்கள் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறதே என்ற கேள்விக்கு, மாணவ - மாணவர்களின் தற்கொலை அதிகரித்திருப்பது ஆட்சியின் அவல நிலையைக் காட்டுகிறது என்றும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.