ரஜினியின் முடிவுக்கு சீமான் வரவேற்பு... அரசியல் மாற்றத்துக்காக நாங்கள் போராடுகிறோம் என்றும் அறிவிப்பு!

Published : Mar 12, 2020, 09:40 PM IST
ரஜினியின் முடிவுக்கு சீமான் வரவேற்பு... அரசியல் மாற்றத்துக்காக நாங்கள் போராடுகிறோம் என்றும் அறிவிப்பு!

சுருக்கம்

 “ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்றுதான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்”. என சீமான் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதலே அவரை கடுமையாக எதிர்த்துவருகிறார் சீமான். தமிழகத்தை ரஜினி ஆள அனுமதிக்கமட்டோம். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என்றும் சீமான் பேசிவருகிறார். ரஜினி கர் நாடகாவில் கட்சி ஆரம்பித்தால், அவரை ஆதரிக்க தயார் என்றும் சில தினங்களுக்கு முன்புக் கூட சீமான் கூறியிருந்தார். இ ந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் தன்னுடைய முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தினார்.


தான் முதல்வராக விரும்பவில்லை என்றும் கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஜினியின் இந்தப் பேட்டியை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்றுதான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்”. என சீமான் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி