தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் ரஜினி ஆளக்கூடாது... ரஜினி அரசியல் முடிவை ஆதரிக்கிறோம் சீமானின் திடீர் ஆதரவு

Published : Mar 12, 2020, 09:28 PM IST
தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும்  ரஜினி ஆளக்கூடாது... ரஜினி அரசியல் முடிவை ஆதரிக்கிறோம்  சீமானின் திடீர் ஆதரவு

சுருக்கம்

ஒரு தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும். ரஜினியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.என்று ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் சீமான்.ரஜினி அரசியல் முடிவை வரவேற்கிறோம்,வாழ்த்துகிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  

T>Balamurukan

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக எதிர்த்து வருபவர். ரஜினியை மிகவும் மதிப்பதாக கூடியவர் சீமான். சீமான் ரஜினியை அரசியல் ரீதியாக தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும். ரஜினியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.என்று ரஜினிக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் சீமான்.ரஜினி அரசியல் முடிவை வரவேற்கிறோம்,வாழ்த்துகிறோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 நடிகர் ரஜினிகாந்த் தனது செய்தியாளர் சந்திப்பில், 'இந்த சிஸ்டத்தை மாற்றவேண்டும், சிஸ்டம் கெட்டுள்ளது. தமிழக அரசியலில் திமுக,அதிமுக என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ரசிகர்களை பணம் செலவு செய்ய வைத்து அவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை.ஒரு அமைப்பு  நல்லவர்களை, திறமைசாலிகளை தேர்வு செய்யும், அதில் ஒருவர் முதல்வராக இருப்பார். நான் முதல்வராக வர விரும்பவில்லை. இதுபோன்ற விஷயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு எழுச்சி உருவாக வேண்டும் அதற்கு ரசிகர்கள், ஊடகங்கள் பாடுபடவேண்டும் என்று பேசினார்.

இதற்கு நாம் தமிழர் சீமான் ஆதரவு தெரிவித்து ட்வீட்டரில்.., '"ரஜினிகாந்த்  அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்”.எனத்தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!