நதிகளை இணைக்கலாம் என முட்டாள்கள் தான் சொல்லுவாங்க !! பாஜக, ரஜினியை கிழித்து தொங்கவிட்ட சீமான் !!

By Selvanayagam PFirst Published Apr 13, 2019, 11:00 AM IST
Highlights

நதிகள் என்பது இயற்கைப் பெருங்கொடை அதை நாமாக உருவாக்கவோ, இணைக்கவோ முடியாது என்றும், முட்டாள்கள்  தான் நதிகளை இணைப்பதாக சொல்வார்கள் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்காக  பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இந்திய நதிகளை இணைப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவின் இந்த அறிக்கைக்கு  நடிகர் ரஜினிகாந்த் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமர் வாஜ்பாயியை சந்தித்து நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் நதிகள் இணைக்கப்பட்டால் அவர் தனது பங்களிப்பாக 2 கோடி  ரூபாய் தருவதாக உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் சில அறிவுகெட்ட முட்டாள்கள் நதிகளை இணைப்பதாக சொல்கின்றனர் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது இங்கு சில அறிவுகெட்ட முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல இடியட்ஸ் பேசிக்கொண்டு அலைகின்றனர். 

ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கண்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான். ஆனால் ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய சீமான் ஏற்கெனவே ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை, அவருக்கு மோடி தான் இயக்குநர் என கடுமையாக  விமர்சித்தார்.

click me!