கமலையெல்லாம் மாற்று அரசியல்வாதின்னு சொல்லிடாதீங்க...! கேவலமா சிரிச்சுட போறாங்க... சீறித்தள்ளிய சீமான்..!

By Vishnu PriyaFirst Published Apr 15, 2019, 3:50 PM IST
Highlights

விவசாயிகளின் ஓட்டுக்களையும் வளைத்துக் கட்ட ஒவ்வொரு கட்சியும் ஏங்கித் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயியையே தனது சின்னமாக்கி தெறிக்க விட்டிருக்கிறார் சீமான். அதுவும் தனது சின்னத்துக்கு அவர் தரும் விளக்கம் அதிர வைக்கிறது. 

விவசாயிகளின் ஓட்டுக்களையும் வளைத்துக் கட்ட ஒவ்வொரு கட்சியும் ஏங்கித் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயியையே தனது சின்னமாக்கி தெறிக்க விட்டிருக்கிறார் சீமான். அதுவும் தனது சின்னத்துக்கு அவர் தரும் விளக்கம் அதிர வைக்கிறது. 

உயிருள்ளவைகளான விலங்குகள், பறவைகளை சின்னமாக கொடுத்தால், அதை பிரசாரத்துக்கு கொண்டு வருகிறேன் பேர்வழியென்று சித்ரவதை செய்வார்கள். அதனால்தான் உயிரற்ற விஷயங்களை சின்னமாக தருகிறார்கள். அந்தவகையில் இப்போது தனக்கு விவசாயியை சின்னமாக தந்திருக்கிறார்கள் என்றால், இந்த நாட்டில் விவசாயி செத்துவிட்டான் என்றுதானே அர்த்தம்?! என நெத்தியடியாய் கேட்கிறார் மனிதர். நெஞ்சு சுடுகிறது அவர் சொல்லும் உண்மையில். 

இந்நிலையில், தீவிர பிரசாரத்தின் இடையில் பல விஷயங்கள் பற்றி அனல் பறக்கப் பேசியிருப்பவர், கமல்ஹாசனின் அரசியலை பற்றி சொன்ன கருத்துக்கள் நம்மவரை மண்டை காய வைத்திருக்கின்றன. அப்படி என்ன சொல்லிட்டார் சீமான்... “2014 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி.க்கு எதிராக பிரசாரம் செய்யாமல் இருந்தோம். அப்ப ஜெயலலிதா அழைத்து எல்லாத் தொகுதிகளிலும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யச் சொன்னார். ஆனால் அது எங்க கொள்கைக்கு சரி வராதுன்னு முடிவெடுத்துட்டு பேசாமல் இருந்துட்டோம். இப்ப எங்களோட பலம் அதிகரிச்சிருக்குது.

 

எங்களை சுற்றி நிற்கும் கட்சிகளை, தலைவர்களையெல்லாம் கவனிக்குறோம். அண்ணன் திருமாவை பார்த்து கலங்குகிறேன். தற்காலிக வெற்றிக்காக, நிரந்தர வெற்றியை அவர் இழந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டவராக பார்க்காமல் ஒரு தமிழராய்ப் பார்த்தால் அண்ணன் திருமா போல் சிறந்த தலைவர் யாரும் இங்கே இல்லை. ஆனால் சபிக்கப்பட்ட இடத்தில் (தி.மு.க.வில்) நிற்கிறார். அதனால் அவரால் தனித்து தெரிய முடியாது. சார்பு அரசியல்தான் செய்ய வேண்டும். இவர், அன்புமணி ராமதாஸ், வைகோ போன்றோர் அரசியலில் செய்யும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டு தெளிவாய் அடியெடுத்து வைக்கிறோம். 

என்னை சர்வாதிகாரிங்கிறாங்க. நேர்மையா இருக்குறவன் சர்வாதிகாரியாதான்யா இருப்பான். எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப் போனால் நேர்மை தங்காது, தாங்காது. கமலின் மக்கள் நீதி மய்யம்  மாற்று அரசியல் பண்ணுது, நீங்களும் மாற்று அரசியல்னு சொல்றீங்களே!ன்னு தயவு செஞ்சு பேசாதீங்க. நான் தமிழ் தேசியம் பேசுறேன், தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்திருக்கிறேன். ஆனா கமல் திராவிடரா, இந்தியரா, தமிழ்தேசியவாதியா? அப்படின்னு இன்னும் ஒரு தெளிவான அரசியலுக்குள் வராமல் குழப்பவாதியாகவே இருக்கிறார். அவரைப் போயி மாற்று அரசியல் தலைவர்னு சொல்லாதீங்க. சிரிச்சுட போறாங்க.” என்று வெளுத்திருக்கிறார். சீமானை என்னான்னு கேளுங்க நம்மவர் ஜி!

click me!