தலைக்கு ரூ 1,00,000 அசரடிக்கும் திமுக... அதிரும் பாமக..!

Published : Apr 15, 2019, 02:20 PM IST
தலைக்கு ரூ 1,00,000 அசரடிக்கும் திமுக... அதிரும் பாமக..!

சுருக்கம்

திமுக நிர்வாகிகளுக்கு, தலா 1 லட்சம் ரூபாய், பாக்கெட் மணி கொடுத்து அசரடித்து வருகிறார் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.  

திமுக நிர்வாகிகளுக்கு, தலா 1 லட்சம் ரூபாய், பாக்கெட் மணி கொடுத்து அசரடித்து வருகிறார் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.

அரக்கோணம் தொகுதியில் பாமகவுடன் திமுக நேரடியாக மோதுகிறது. இருகட்சிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி கடுமையாக உள்ளது. ஜெகத்ரட்சகனை எதிர்த்து ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். பணத்தை தண்ணீராக இரைத்து பாமகவை வீழ்த்துவதற்காக ஜெகத்ரட்சகன் வியூகம் அமைத்து வருகிறார்.

அரக்கோணம் தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தைக் களமிறக்கி வோட்டுக்களை வேட்டையாடி வருகின்றனர். தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, தொகுதி முழுவதும் உள்ள திமுக, நிர்வாகிகளுக்கு, தலைக்கு, 10 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து விட்டார். சமீபத்தில், ஒன்றிய, நகர செயலர்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாயை, பாக்கெட் மணியாக கொடுத்திருக்கிறார். ‘’தேர்தலில் நல்லா வேலை செய்யுங்கள். வெற்றிபெற்ற பிறகு இதைவிட அதிகமா அள்ளித்தர்றேன்’’ என அட்வான்ஸ் போட்டிருக்கிறார். 

இது தவிர, தினமும் தன்னுடன் பிரசாரத்துக்கு வரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, தலைக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருகிறார். இதையறிந்த பா.ம.க, முழு வேகத்துடன் ஜெகத்ரட்சகனை தோற்கடிப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகிறது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!