"எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்ததே சாதனைதான்..."  - சீமான் கிண்டல்!

Asianet News Tamil  
Published : Mar 24, 2018, 12:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
"எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்ததே சாதனைதான்..."  - சீமான் கிண்டல்!

சுருக்கம்

seeman says about palanisamy regime

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. ஓராண்டு நிறைவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொடி, பல்வேறு இடங்களில் சாதனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஓராண்டு சாதனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனை குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பழனிசாமி ஆட்சி நடந்தே சாதனைதான் என்று கூறியுள்ளார்.

சீமான், செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடந்ததே சாதனைதான் என்றும், இதில் ஓராண்டு நிறைவுக்கான சாதனை வேறு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் வராது என்றார். காவிரி மேலாண்மை வாரியத்தை ஆளும் பாஜகவும் அமைக்காது... காங்கிரசும் அமைக்காது என்று சீமான் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
60 ஆண்டுகால நிராசை.. தமிழகத்தில் ராகுல் ட்விஸ்ட்..! சல்லி சல்லியாக நொறுங்கும் தமிழக காங்கிரஸார்..!