விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த அரசியல் வலிமையாக இருக்கும். நான் யாரையும் ஆதரிப்பது கிடையாது விஜய் கட்சி தொடங்கினால் என்னை ஆதரிக்கட்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள்
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்தாவது நினைவு நாள் இன்று இதனை தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்து வருகின்றனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரிக்கை துறை மட்டும் இல்லாமல் விளையாட்டுத்துறையிலும் அவருக்கு ஆர்வம் அதிகம் , பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி பெருமை அவரை சாரும். அனைவரையும் நேசித்த பெருமகன் , அவருடைய நினைவை போற்றுவதில் பெருமை அடைவதாக தெரிவித்தார்.
விஜய் என்னை ஆதரிக்கட்டும்
அம்பேத்கர் பிறந்தாள் கொண்டாடத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டது தொடர்பான கேள்வி பதில் அளித்த அவர், அரசியல் முயற்சிகளை தொடங்கவே விஜய் முயற்சி செய்கிறார் என்றே நான் நினைக்கிறேன். திமுக,அதிமுகவை வைத்து அரை நூற்றாண்டுகளை இந்த மண் கடந்து விட்டது , விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த அரசியல் வலிமையாக இருக்கும். நான் யாரையும் ஆதரிப்பது கிடையாது விஜய் கட்சி தொடங்கினால் என்னை ஆதரிக்கட்டும். சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதால் தமிழ்நாடு தமிழர்களுக்கு சுடுகாடாக மாறி வருகிறது. சீமான் சங் பரிவாரிகளின் குரலாக ஒலிக்கிறார் என்று திருமாவளவன் கேள்விக்கு அண்ணனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டி..! வேட்பாளரை அறிவித்த எடப்பாடி