ஏன் படிக்கனும் எனக்கு ஒரு காரணம் சொல்லு... கருத்தா கேள்விகேட்டு சிதறவிடும் சீமான் !!

By sathish kFirst Published Jun 2, 2019, 5:01 PM IST
Highlights

சரி இந்தியை படிக்கிறோம் ஏன் படிக்கனும் என்று சொல்லுங்கள். ஒரு காரணம் சொல்லுங்கள் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

சரி இந்தியை படிக்கிறோம் ஏன் படிக்கனும் என்று சொல்லுங்கள். ஒரு காரணம் சொல்லுங்கள் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது.   

இந்நிலையில் பலரும் இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சீமான் கூறுகையில், 50 ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது தமிழ் அதைவிடுத்து 500 ஆண்டுகள் கூட தாண்டாத இந்தியை படிப்பதை உயர்ந்தது  என்று எப்படி சொல்லுகிறீர்கள். விஞ்ஞானி மயில்சாமி  அண்ணாதுரை சொல்கிறார் என் கல்வி என்னை கரைசேர்க்கவில்லை ஆனால் என் தாய் மொழி தமிழ் என்னை நிலவுவரை கொண்டு சேர்த்திருக்கிறது. அதற்கு காரணம் அரசு பள்ளியில் தாய் மொழி கல்வியில் படித்ததுதான். தமிழ் எனக்கு தடைக்கல்லாக ஒருபோதும் இருந்ததில்லை படிக் கல்லாகத்தான்  இருந்தது. 

இங்குமட்டுல்ல உலகில் எங்கும் தாய் மொழியில் கல்வி கற்றவன் மட்டும்தான்  படைக்கிறான். ஆனால் இந்தியா மட்டும்தான் பயன்படுத்துது. எனவேதான் எல்லா நாடும் மேட் இன் ஆக இருக்கிறது, ஆனால் இந்தியா மட்டும் தான் மேக் இன் ஆக இருக்கிறது. 

நம்ம பாடத்திட்டத்தில் சில குறைகள் இருக்கிறது அதை சரி பண்ண வேண்டும் மேம்படுத்த வேண்டும் அப்படி தான் பேச வேண்டுமே  தவிர இந்தி படித்தால்தான் கல்வியின் தரம் என்பது முட்டாள் தனம். நாங்கள் எப்படி கல்வி தரத்தை மேம்படுத்துவோம் என்பதை வரைவு புத்தகமாக கொடுத்திருக்கிறோம். அதைப் படியுங்கள். புத்தகம் கிடைக்கவில்லை என்றால் மக்கள் அரசு டாட் காம் என்ற இணைய தளத்தில் இருக்கிறது படியுங்கள்.

நம் தாய் மொழியான தமிழை , நம் கல்வியை எப்படி உயர்த்த வேண்டும் என எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியாளர்களிடம் அந்த கனவு இருக்கிறதா என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.  

வருபவர்கள் எல்லாம் தமிழை சவப்பெட்டியில் போட்டு கடைசி ஆணி அடிக்க நினைத்தால் எப்படி தமிழ் உயிர்பெறும்.  இந்தியை எங்கள் பிள்ளைகள் விரும்பி படிக்கிறார்களா அதில் ஒன்றுமே பேசமுடியாது. ஆனால் கட்டாயமாக படிக்க சொன்னால் அதை  ஏற்கவே முடியாது.

சரி இந்தியை படிக்கிறோம் ஏன் படிக்கனும் என்று சொல்லுங்கள். ஒரு காரணம் சொல்லுங்கள். இந்தி படித்தால்தான் வேலை என்றால் ஏன் தினம் 3000, 4000 பேர் வடமாநிலத்திலிருந்து இங்கே பிழைப்பு தேடி வருகிறார்கள். அவரவர்கள் மொழி அவரவருக்கு உயர்ந்தது என்றால் என் மொழி எனக்கு உயர்ந்தது என தெறிக்கவிட்டுள்ளார்.

tags
click me!