மத்திய அமைச்சர்கள் பகட்டு காட்டக்கூடாது... புயலாய் மாறிய மோடி அதிரடி உத்தரவு..!

Published : Jun 02, 2019, 04:14 PM IST
மத்திய அமைச்சர்கள் பகட்டு காட்டக்கூடாது...  புயலாய் மாறிய மோடி அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என இடண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என இடண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், ’வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக்கூடாது. ஆடம்பரமான விழாக்களில் பங்கேற்க கூடாது. மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும். அதற்காக ஆடம்பரம் வேண்டாம். பகட்டான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம். அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்ற வேண்டும்’’ என அறிவுறுத்தி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்