ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனதற்கு தனது ’வலது கரம்’ தான் காரணமா..? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jun 2, 2019, 3:35 PM IST
Highlights

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது, ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும், அவருடன் நிழலாய் வலம் வந்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராகி இருக்கிற மு.க.ஸ்டாலினுக்கு சீனியர் என்பதால், துரைமுருகன் வழிகாட்டியாகி விட்டார். அடுத்து எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது, ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும், அவருடன் நிழலாய் வலம் வந்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராகி இருக்கிற மு.க.ஸ்டாலினுக்கு சீனியர் என்பதால், துரைமுருகன் வழிகாட்டியாகி விட்டார். அடுத்து எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

ஓ.எம்.ஜி குழு திமுகவின் ஐடி விங்கை கவனித்து வருகிறது. இதனை நிர்வகிப்பது ஸ்டாலின் மகன் சபரீசனாக இருந்தாலும் சம்பளம் கொடுப்பதெல்லாம் ஏ.வ.வேலு தான். இதனால் ஐடி விங்கும் இவர் சொல் படியே நடக்கிறது. ஸ்டாலின் வீட்டில் உள்ளவர்களே ஏ.வ.வேலுவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிப்பதே இல்லை. துரைமுருகன் அரசியல் ரீதியாக நிழலாகத் தொடர்ந்தாலும், எ.வ.வேலு அனைத்திலும் மு.க.ஸ்டாலினின் நிழலாகவே மாறிவிட்டார். ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு. மு.க.ஸ்டாலின் ஏ.வ.வேலு மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்.

அந்த நம்பிக்கையில் தான் இப்போது ஓட்டை விழுந்திருப்பதாக கூறுகிறார்கள் அறிவாலயத்தில்... மக்களவை தேர்தலிலும், சட்டசபை இடைத் தேர்தலிலும் எ.வ. வேலு சொன்னவர்களுக்கே சீட் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். அத்தனை நம்பிக்கை வைத்திருந்த வேலு மீது தேர்தல் முடிவுக்கு பிறகு ஸ்டாலினுக்கு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. காரணம் இடைத்தேர்தலில் சூலூர் தொகுதி பொறுப்பாளராக இருந்த எ.வ.வேலு அந்தத் தொகுதியை கோட்டை விட்டுவிட்டார். 

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார் ஸ்டாலின். அதனால் தான் வலது கரமான எ.வ.வேலுவை சூலூருக்கு பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின். பொங்கலூர் பழனிசாமியை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு எனக் கூறியிருக்கிறார் ஸ்டாலின். வெற்றிக்கு நான் உத்தரவாதம் என நம்பிக்கையூட்டியுள்ளார் வேலு. 

அதிமுக மீது வெறுப்பு, பொள்ளாச்சி விவகாரம் எல்லாம் தமக்கு சாதகமாக இருப்பதாக நினைத்துக் கொண்ட வேலு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டி இருக்கிறார். இதனால் சூலூர் தொகுதியை திமுக கோட்டை விட்டு விட்டது. அதோடு அந்த தொகுதி நிர்வாகிகளையும் ஒருமையில் மரியாதை இல்லாமல் நடந்திருக்கிறார் வேலு. 

தோல்விக்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது எ.வ,வேலு நடந்து கொண்டது பற்றி மு.க.ஸ்டான் காதுகளுக்கு சில தகவல்கள் வந்திருக்கிறது. அத்தோடு பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட ஆர்.மணியும் வேலு சொன்னவர்தான்.  குடும்பத்தில் ஒருவராக மதித்து, நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருந்த வேலு இப்படி நடந்து கொண்டதால் ஏ.வ.வேலு மீது கடுமையான அதிருப்தியில் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என நினைத்த ஸ்டாலினுக்கு கூட இருப்பவர்களே இப்படி அலட்சியமாக நடந்து கொண்டது வேதனையை அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.  
 

click me!