Seeman: சின்ன பசங்கனு அடிச்சுட்ட.. நானா இருந்தா செருப்பாலா அடிச்சு வெளுத்திருப்பேன்.. சீறிய சீமான்.!

By vinoth kumarFirst Published Dec 22, 2021, 3:13 PM IST
Highlights

திமுகவை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தருமபுரியில் கூட்டம் நடத்தினர். அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய வாக்குகள் மட்டும் தேவை என்கின்றனர்.

என்னை தொடமுடியவில்லை  என்பதால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். 

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில்;- திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த திமுகவினர் பேச்சை நிறுத்தும்படி மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நிர்வாகிகள் மாறி மாறி நாற்காலியை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். மேலும் மொராப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோதல் சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்;-திமுகவை விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அங்கு ஜனநாயகம் இல்லை. இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என தருமபுரியில் கூட்டம் நடத்தினர். அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய வாக்குகள் மட்டும் தேவை என்கின்றனர்.

கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடந்த காலத்தில் நானும் பழிவாங்கப்பட்டேன். ஈழ தமிழர்களை பேசியதால் ஒராண்டு சிறையில் இருந்தேன். என் உரிமை நான் கூட்டத்தில் பேசும்போது செருப்பு காட்டி பேசினேன். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பேசுகின்றனர். என்னை தொடமுடியவில்லை. அதனால் கூட இருப்பவர்களை கைது செய்து சிரமத்தை உருவாக்குகின்றனர்.

"

மேடையில் ஏறி தகராறு செய்வது தான் திமுக. இதுதான் செய்யும். சின்ன சின்ன பசங்க என்பதால் தகராறு செய்துவிட்டீர்கள். அதே மேடையில் நான் நீன்று பேசியிருந்தால் செருப்பை காட்டிதோடு விட்டு இருக்க மாட்டேன். அடித்து வெளுத்திருப்பேன் என சீமான் பேசியுள்ளார். 

click me!