இத்தனை வருடங்களாக சீமான் செதுக்கிச் செதுக்கி சேர்த்து வைத்திருந்த கம்பீர பெயரை, ஒரேயொரு ஆபாச ஆடியோ அடிச்சு நொறுக்கி ஆஃப் பாயில் செய்துவிட்டது. சீமானின் உதவியாளர் புகழேந்தியும், நாம்தமிழர் கட்சியின் முன்னாள் ஆதரவாளர் அறந்தாங்கி தனசேகரும் மிக மூர்க்கமாக வார்த்தை யுத்தம் நடத்தி, தங்களையும் அந்த கட்சியையும் அசிங்கப்படுத்திக் கொண்ட ஆடியோ அது.

இந்த ஆடியோ வெளியான பிறகு சீமான் மீது பல விமர்சனங்கள் வெடித்தன. ’வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்களிடம் மாதாமாதம் பெரும் தொகை வசூலிக்கிறார்! கட்சியை சர்வாதிகாரமாய் நடத்துகிறார்! செல்வா பாண்டியர் மற்றும் இளங்கோ மள்ளர் எனும் இரண்டு தமிழ்தேசியவாதிகளின் மர்ம சாவுக்கு சீமானே காரணம்!’ என்றெல்லாம் பெரும் பஞ்சாயத்துகள் வெடித்தன.
பண விவகாரம் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பெரிதாய் அலட்டிக்காத சீமான், இருவரின் மர்ம சாவில் தன் தலை உருட்டப்பட்டதும் நொந்துவிட்டார். மரணித்த இரு நபர்கள் குறித்துப் பேசியிருப்பவர், “இறந்து போன இளங்கோ, செல்வா இரண்டு பேருமே என் தம்பிகள். நான் பேசுற அரசியலைத்தான் அவங்க பேசினாங்க. அப்புறம் எப்படி என் எதிரியாவாங்க அவங்க? அந்த ரெண்டு பேரின் மரணத்துக்கு நான் எப்படி வருந்தினேன்னு என்னைச் சார்ந்தவங்களுக்கு நல்லாவே தெரியும்.
ஆனால், கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம என் மேலே குற்றச்சாட்டை சுமர்த்துறாங்க. ஒண்ணு சொல்லட்டுமா? என்னை எதிர்ப்பவனெல்லாம் என் எதிரியில்லை. நான் யாரை எதிர்க்கிறேனோ, அவன் தான் என் எதிரி.” என்று பொங்கியிருக்கிறார்.
இந்நிலையில், ”தன் மீது சாதாரண விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கூட அதற்கு வீராவேசமாக சீறும் சீமான், இந்த இரண்டு மர்ம சாவுகள் விவகாரத்திற்கு மட்டும் சிணுங்களாகவும், வருந்தியும் பதில் சொல்லியிருப்பது ஏன்?” என்று விடாமல் துரத்துகிறார்கள் விமர்சகர்கள்.
இதற்கு என்ன ரியாக்ஷனைக் காட்டுவாரோ சீமான்?!