தாயை இழந்து தவித்த ஓபிஎஸ்..! நள்ளிரவில் வீட்டிற்கே ஓடி சென்று ஆறுதல் சொன்ன சீமான்

By Ajmal Khan  |  First Published Feb 26, 2023, 9:50 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவையொட்டி, தேனியில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்


ஓபிஎஸ் தாயார் மறைவு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் திமுக சார்பாக மூத்த அமைச்சர்  ஐ. பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை பழனியம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது இந்த நிகழ்வில் ஓபிஎஸ் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

Latest Videos

மறைந்த தாயின் காலை பிடித்து கதறிய ஓபிஎஸ்.. அண்ணே கலங்காதீங்க.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

ஆறுதல் தெரிவித்த சீமான்

இந்தநிலையில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை  அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நள்ளிரவில் நேரில் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஓ.பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வயது மூப்பு காரணமாக பழனியம்மாள் உயிர் இழந்தார். உடனடியாக இறுதி சடங்கு வருவதற்கு திட்டமிட்டேன்.

ஓபிஎஸ் காசிக்கு பயணம்

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் கலந்து கொண்டதால் உடனடியாக வரமுடியவில்லை. இதனையடுத்து பழனியம்மாள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். பழனியம்மாளுக்கு எங்களுடைய கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இந்தநிலையில் தனது தாயார் பழனியம்மாளின் அஸ்தியை கரைக்க ஓபிஎஸ் தனி விமானத்தில் காசிக்கு புறப்பட்டு சென்றார். இன்று இரவே மீண்டும் தேனி திரும்பவுள்ளார். 

இதையும் படியுங்கள்

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படும்.? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு தகவல்
 

click me!