கேரளாவில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஹெச்.ராஜா இருப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியினருடன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் கேரளா புறப்பட்டுள்ளார்.
கேரளாவில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஹெச்.ராஜா இருப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியினருடன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் கேரளா புறப்பட்டுள்ளார். நேற்று கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனசேரி எனும் முகாமிற்கு சீமான் சென்றுள்ளார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு சீமான் தான் கொண்டு சென்று பொருட்களை வழங்கி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு அங்கிருந்து சீமான் புறப்பட்டு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது திடீரென ஏராளமான வாகனங்களில் வந்த போலீசார் சீமான் வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். என்ன ஏது என்று சீமானுடன் இருந்தவர்கள் பதறிப்போய் போலீசாரிடம் கேட்டுள்ளனர். அதற்கு உங்கள் அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் என்ன காரணம்? என்று கேட்டுள்ளனர். அதற்கு தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இயின் கொடி மற்றும் பிரபாரகன் புகைப்படத்துடன் உங்கள் வாகனம் கேரளாவிற்குள் நுழைந்துள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர். உடனே சீமான் வாகனத்தில் இருப்பது எல்.டி.டி.இ கொடி இல்லை என்றும் அது நாம் தமிழர் கட்சியின் கொடி என்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் போலீசார் அதனை ஏற்கவில்லை. இதனை தொடர்ந்து சீமான் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து போலீசார் அருகே உள்ள போலீஸ் கேன்டீனுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் என்ன நினைத்தனரோ தெரியவில்லை அனைவரும் விடுவிக்கப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர். உடனடியாக யார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்களை கைது செய்தீர்கள் என்று போலீசாரிடம் சீமான் கேட்டுள்ளார். அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் உங்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக கூறியதாகவும், நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்.
பின்னர் விசாரணையில் உங்கள் நடவடிக்கையில் எந்த பிரச்சனை இல்லை என்றும், உங்கள் வாகனத்தில் இருப்பது நாம் தமிழர் கட்சியின் கொடி என்பதையும் தெரிந்து கொண்டதால் விடுவித்துவிட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். கேரள பா.ஜ.கவின் மேலிட பொறுப்பாளராக ஹெச்.ராஜா இருக்கிறார். ஹெச்.ராஜாவை சீமான் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கேரளாவில் தனக்கு உள்ள தொடர்புகளை வைத்து ஹெச்.ராஜா சீமானை மிரட்டிப்பார்த்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியினர் புகார் கூறியுள்ளனர்.