இரவு பகல் பாராமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. ஓபிஎஸ்-இபிஎஸ் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 1:38 PM IST
Highlights

நம் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடனும், இரவு பகல் பாராமல் சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம், தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை தொடங்கி பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதேபோல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாரிசான இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு தவ வாழ்வு வாழ்ந்து பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தினார்கள்.

நம் இரு பெரும் தலைவர்களின் நல்லாசியுடன் ஆட்சி பொறுப்பேற்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கழக அரசு மக்கள் நலனை முன்வைத்து, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அந்த வகையில் கழக அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன், அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுகவினரின் பல்வேறு முறைகேடுகளையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி 6-4-2021 அன்று தமிழகத்தில் சுமுகமான வாக்குப்பதிவு  நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கு, முகவர்களுக்கும், அதேபோல் கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். 

வாக்குப்பதிவு நிறைவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 2-5-2021 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை நம் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!