9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு.? மீண்டும் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 11:44 AM IST
Highlights

இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை, பாட புத்தகங்கள் விநியோகம், கல்வி தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகத்தை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தனர். 

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் அன்றாடும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தொடங்கி உள்ளனர். கொரோனா முதல் அலை இரண்டாவது அலை என தொடர்ந்து பரவி வந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை, பாட புத்தகங்கள் விநியோகம், கல்வி தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகத்தை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தனர். இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் அனைத்து வகை  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்று, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டிருந்தார். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பள்ளிக்கு வருகை தருவதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு பரிசீலித்து வரும் நிலையில் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று உத்தரவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு அனைத்து பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் மூலம் அலகு தேர்வு நடத்துவது, ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களை வரவேற்று பாடம் நடத்துவது போன்றவற்றிற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

click me!