ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக புறக்கணித்தபோது கருணாநிதிகாக நாங்கள் எப்படி வரமுடியும்..? அதிமுக அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Aug 2, 2021, 11:39 AM IST
Highlights

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க புறக்கணிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க புறக்கணிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’சட்டப்பேரவை நூற்றாண்டு என வரலாற்றை மாற்றுகிறது திமுக அரசு. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். 
 

click me!