பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது ஏன் நடவடிக்கை எடுக்கல !! தேர்தல் ஆணையத்தை கிழித்து தொங்கவிட்ட உச்சநீதிமன்றம் !!

By Selvanayagam PFirst Published May 4, 2019, 7:11 AM IST
Highlights

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது காங்கிரஸ்  கட்சி கொடுத்துள்ள 40 புகார்களின் மீது  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இன்னும் 4 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டம் என உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை  4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 3  கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இந்த அறிவிப்பு வெளியானதுமே பாஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில், மதம், ஜாதி, ராணுவம், பாதுகாப்பு துறைகளை சம்பந்தப்படுத்தி பிரசாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் தங்களின் பிரசாரங்களில் இந்த நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவதை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தியும், பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை குறிப்பிட்டும் மோடி ஓட்டு கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்கள் அளித்தது. 

ஆனால், அது பற்றி விசாரித்த தேர்தல் ஆணையம், 'மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை' என சமீபத்தில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரசை சேர்ந்த பெண் எம்பி சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுஷ்மிதா ஆஜரான அபிஷேக் மானு சிங்வி, நரேந்திர மோடி, அமித் ஷா மீது புகார்கள் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே, 2 பேர் மீதான புகார்களை ஆராய்ந்து உடனடியாக முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, 'மோடி, அமித் ஷா மீது காங்கிரஸ் அளித்துள்ள புகார்களின் மீது வரும் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் மெத்தனத்தையும் கண்டித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!