கைதியாக்கி ப.சிதம்பரத்திடம் விசாரணை... துடியாய் துடிக்கும் சிபிஐ..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2019, 11:19 AM IST
Highlights

ப.சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உடனடியாக விசாரிக்க மறுத்து விட்டார். 
 

ப.சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உடனடியாக விசாரிக்க மறுத்து விட்டார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால் உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து விட்டார்.

 

முன்னதாக ப.சிதம்பரம் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுத்து விட்டார். தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என ரமணா விலகிக் கொண்டதால் ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது. அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாத நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு சிபை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 24 மணி நேரத்தில் 3 முறை முகாமிட்டனர். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  உடனடியாக முன் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்து விட்டதால் தலைமறைவாக உள்ள ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.  
 

click me!