"அம்பட்டயன்" என்று சொன்னது தவறுதான். மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்.!!

By T Balamurukan  |  First Published May 23, 2020, 7:00 PM IST

கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான, அலட்சியமான செயல்பாடுகளையும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் சுணக்கத்தையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் விமர்சித்தேன்.
 


கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான, அலட்சியமான செயல்பாடுகளையும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் சுணக்கத்தையும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் விமர்சித்தேன்.

Tap to resize

Latest Videos

undefined

 அப்போது, 'முடிதிருத்தும் கடைகளைத் திறப்பதில் கூட இந்த அரசுக்கு சரியான திட்டமிடுதல் இல்லை' என்பதைச் சுட்டிக் காட்டி, மதுக்கடைகளை திறக்க மாநிலங்களே முடிவெடுக்கலாம் என உத்தரவிடும் மத்திய அரசு, முடி திருத்தும் கடைகளை திறக்க மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன். அச்சமயம் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைத் தவறுதலாக உச்சரித்துவிட்டேன். இது எனது பேச்சினூடாக வந்துவிட்டது. அதற்காக எனது வருத்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தொடக்க காலம் முதல் திராவிட இயக்கத்தின் விளைநிலமாக இருந்தவை முடிதிருத்தும் நிலையங்கள். திராவிட இயக்க இதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்து,  பகுத்தறிவு, இன உணர்வு, மொழிப்பற்று ஆகியவற்றின் பிரச்சார மையங்களாக அவை இருந்தன. அவை தலைமுடி திருத்தும் கடைகள் மட்டுமல்ல, முடி எனப்படும் மன்னனைத் திருத்தும் கடைகளாகச் செயல்பட்டன. திராவிட இயக்கத்தில் நான்காவது தலைமுறையாகச் செயல்பட்டு வரும் நான் இத்தகைய வரலாற்றை அறிந்தவன். என்றாலும் தவறுதலாக அச்சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மீண்டும் ஒருமுறை எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

click me!