சித்து விளையாட்டால் சிக்கி தவிக்கும் சசிகலா... பெங்களூரு சிறை நிர்வாகம் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 5, 2020, 11:26 AM IST
Highlights

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பிள்ளை என பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பிள்ளை என பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்   அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிவடைகிறது. நன்னடத்தை மற்றும் இதே வழக்கில் ஏற்கனவே 35 நாட்கள் சிறையில் இருந்த காலத்தை கழித்து முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்  என்ற தகவல் வெளியானது. 

மேலும், நீதிமன்றம் விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை கடந்த மாதம் 17ம் தேதி  செலுத்தியதால் இந்த வார இறுதிக்குள் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியானது. இதனால், தமிழன அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் விடுதலை, சிறையில் அவருக்கு வழங்கப்படும் விடுமுறை, நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களால் முன்கூட்டியே விடுதலை செய்ய  வாய்ப்புள்ளதா? என கேட்டு சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ம் தேதி தான் சசிகலா விடுதலை செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது. 

click me!