சொத்துக்களை விற்றாவது இவர்களை தோற்கடிக்க வேண்டும்... சிறைக்குள் லிஸ்ட் போட்டு காத்திருக்கும் சசிகலா..!

Published : Mar 02, 2020, 05:43 PM IST
சொத்துக்களை விற்றாவது இவர்களை தோற்கடிக்க வேண்டும்... சிறைக்குள் லிஸ்ட் போட்டு காத்திருக்கும் சசிகலா..!

சுருக்கம்

வரும் சட்டசபை தேர்தலில் சில அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என சசிகலா தரப்பு சபதம் எடுத்து இருப்பதாகக் கூறுகிறார்கள். 

சொத்துக்களை விற்க சசிகலா தரப்பு ஆலோசித்து வருவதாக க்கூறப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிறையில சசிகலா இருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் சில அமைச்சர்களை தோற்கடிக்க வேண்டும் என சசிகலா தரப்பு சபதம் எடுத்து இருப்பதாகக் கூறுகிறார்கள். 

எவ்வளவு கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை அவர்களை தோற்கடித்தே தீர வேண்டும் என கூறி வருகிறார்கள். வருமான வரித்துறை கிடுக்கிப்பிடியால், மறைத்து வைத்திருந்த பணத்தை வெளியே எடுப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சென்னை, கோவையில் அவர்களுக்கு இருக்கிற சொத்துக்களை விற்பனை செய்வதற்கு, சிறையில் தன்னை பார்க்க வருபவர்களிடம் சசிகலா ஆலோசனை நடத்தி இருக்கிறார். இப்போது இருக்கிற சூழலில், யாரும் நம்மிடம் சொத்து வாங்க மாட்டார்கள் என பார்த்து வருபவர்கள் ஆலோசனை சொல்லி விட்டு அவர்கள் கிளம்புகிறார்களாம்.

முதலமைச்சர் ஆசையால், உடனே ஜெயலலிதாவாக மாறி உடையை மாற்றி ஆட்சி அமைக்க துடித்ததால் வந்த வினை. ஆசைப்படாமல் ஒதுங்கி இருந்து வழி நடத்தி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? என்கிறார்கள் அவ்ருடன் இருக்கும் ஆதரவாளர்கள். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!