
டிஐஜி ரூபா குற்றம்சாட்டியதைப் போல பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று சசிகலா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான டாக்டர். நமது எம்.ஜி.ஆர். இதழில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்ட செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு, சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அதற்கு அவர் சிறப்பு சலுகைகள் எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் இருந்த 2 கைதிகளுக்கு தன் மீது அதிக அன்பு இருந்ததன் காரணமாக, அடிக்கடி தன்னை வந்து பார்த்து செல்வதாகவும் அன்பின் காரணமாக தனக்கு பணிவிடைகள் செய்தததாகவும் சசிகலா விசாரணையின்போது தெரிவித்தாக நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றபடி சிறை விதிமுறைகளின் படியே நடந்து கொள்வதாக சசிகலா தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து சசிகலாவின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியானது தற்போது கர்நாடக அரசிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது..