சசிகலா சோதனையிலும் சாதனை.....! முயற்சியின் முதல் ஸ்டெப்......

 
Published : Feb 16, 2017, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சசிகலா  சோதனையிலும்  சாதனை.....!     முயற்சியின்   முதல்   ஸ்டெப்......

சுருக்கம்

சிறையில்  இருந்துக்கொண்டே  சாதித்த  சசிகலா.......

கடந்த  1௦  நாட்களுக்கும் மேலாக ஆட்சியை  பிடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு, முற்றுபுள்ளி வைத்திருக்கிறது ஆளுனரின் அறிவிப்பு .

அஇஅதிமுக பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்ட  சசிகலாவிற்கும் ஒ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பெரும் போட்டி ஏற்பட்டது.

தாம் கட்டாயப்படுத்தபட்டதால் தான் ராஜினமா  செய்தேன்  என்றும் , இதற்கு காரணம் சசிகலா  மற்றும் அவரது குடும்பதினர் என்றும் ஒபிஎஸ் பகிரங்கமா குற்றம்  சாட்டினார். இதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவின்  முன்னாள்  அமைச்சர்கள் , 11  எம்எல்ஏக்கள், சில எம்பிக்கள்  ஒ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால், ஆட்சியை அமைக்க போவது யார் என்ற குழப்பம்  நிலவி வந்த நிலையில்,  தனது ஆதரவு   எம்எல்ஏக்கள் 124  பேரை  கூவத்தூர்  ரிசாட்டிற்கு அழைத்த சென்ற சசிகலா அங்கேயே அவர்களை சிறை வைத்தார்.  மேலும் தினமும் கூவத்தூர்  சென்று  எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களை  உற்சாகம் செய்து வந்தார் . ஒரு சிலரை தவிர பெரும்பாலான  எம்எல்ஏக்கள்  சசிகலாவிற்கு ஆதரவு  தெரிவித்ததாக கூறப்பட்டது . சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூவத்தூர்  பகுதியில் 144  தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டதுடன் ,  போலிஸ்   குவிக்கப்பட்டு அசாதாரண  சூழல் நிலவியது. இந்நிலையில்,  சசிகலா  குற்றவாளி என  தீர்ப்பு  வந்ததை அடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் .  ஆனால் எப்படியும் ஆட்சியை பிடித்த  தீருவேன்  என  உறுதியோடு  இருந்த சசிகலா எடப்பாடி  பழனி சாமியை  சட்டமன்ற  தலைவராக  தேர்வு செய்தார்.

அதன்  பிறகு பலமுறை இருமுறை ஆளுனரை சந்தித்து , ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று   தற்போது தமிழக   முதல்வராக  நியமித்து  உத்தரவு பிறப்பித்து  உள்ளார் .

இதன் மூலம் , தன்னுடைய  முடிவிலிருந்து பின்வாங்காமல்  சசிலா  எம்எல்ஏக்கள் ஆதரவுடன்   எடப்பாடிய பழனிசாமியை  முதல்வராக்கி  சாதித்தார்  என அதிமுக  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு