தாறுமாரு தமாசு பண்ணும் சசிகலாவின் அக்கா மகன்... ஆனால் இது சீரியஸ் மேட்டர்! புது கட்சி ஆரம்பிக்கும் பாஸு...

By sathish kFirst Published Aug 29, 2018, 6:57 PM IST
Highlights

அதிமுகவிலிருந்து சசி குடும்பத்தை வெளியேற்றிய நேரமோ என்னமோ?  மன்னார்குடி சசிகலா குடும்பத்திலிருந்து இன்னும் எத்தனை எத்தனை  அக்கப் போர்களை இந்த தமிழகம்  சந்திக்கப்போகிறதோ எனத் தெரியவில்லை.

அதிமுகவிலிருந்து சசி குடும்பத்தை வெளியேற்றிய நேரமோ என்னமோ?  மன்னார்குடி சசிகலா குடும்பத்திலிருந்து  இன்னும் எத்தனை எத்தனை  அக்கப் போர்களை இந்த தமிழகம்  சந்திக்கப்போகிறதோ எனத் தெரியவில்லை,   மீண்டும் ஒருவர் தமிழக அரசியலில் தாறுமாறு பண்ண  ஒருவர் கிளம்பியுள்ளார். அமாம் அவரே தான் சசிகலாவின் அக்காள் மகனும் தினகரனின் தம்பியுமான தலைவன் பாஸ் என்கிற பாஸ்கரன்.   

சசிகலா சிறைக்கு சென்ற சில மாதங்களிலேயே அவர் நியமித்து விட்டு போன துணைப்பொது செயலாளர் பதவியை பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பியதால் கோபத்தில் தனது சகாக்களோடு வெளியே வந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பார்ட்டியை ஆரம்பித்தார். அந்த பார்ட்டியில் தனது மகனுக்கு போஸ்டிங் கேட்டு கொடுக்காததால் அம்மா அணியை ”அண்ணா திராவிடர் கழகம்” எனத் தனி பார்ட்டியை ஆரம்பிக்க சல்லடைப்போட்டு சலித்து ஒரு பெயர் எடுத்து ஆரம்பித்துவிட்டார்.

ஒரு காக்கா தம்மாதூண்டு  ஆய் இருந்ததுக்கு இவ்வளவு கலவரமா? என வடிவேலு கேட்பதைப்போல சசிகலா குடும்பத்திலேயே இரண்டு கட்சிய ஆரம்பித்து தமிழக மக்களை தெறிக்க விட்டுள்ள நிலையில், அதே மன்னார்குடி ஃபேமிலி ஒரு நியூ என்ட்ரி போட்டுள்ளது.  ஆமாம் தனது கட்சியின் பெயர், கொடியை திருத்தணியில் வைத்து வெளியிடப் போகிறாராம் தலைவன் பாஸ். நாளை  காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என போஸ்டர் அடித்து தலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். அதில் எண்ணக் கொடுமை என்றால் புரட்சித் தலைவரின் ஆட்சி அமைய என்று கூறி எம்ஜிஆர் ஸ்டைலில் போஸ் கொடுத்து  தாறுமாறு பண்ணியிருக்கிறார் தலைவன் பாஸ். ஏழை எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப் போவதாகவும், அதற்கு புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் அலை கடலென திரண்டு வர வேண்டும் வாசகங்கள் போட்டு போஸ்டரில் போஸ் கொடுத்துள்ளார். 


 
ஆமாம் தலைவன் பாஸ்க்கு கூட்டம் எப்படி வரும்? கடந்த வாரம் தினகரன் பொதுக்கூட்டம்  நடத்தினார். அந்த மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் எவ்வளவோ முயன்றும் பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட முடியவில்லை. ஏராளமான சேர்கள் காலியாகவே கிடந்தன. இந்த நிலையில் கட்சிக்காரர்கள் வராத நிலையில் வேலூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்களை நிர்வாகிகள் பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். பாவம் கூட்டம் அள்ளுது... அடுத்த முதல்வர் தினகரன் தான் என உதார் விட்டுவரும் இந்த நிலையில் வேறு கிரகத்திலிருந்து ஏலியன்ஸ் கொண்டுவந்து கூட்டத்தை நடத்துவாரோ என நெட்டிசன்கள்  கிண்டலடித்துள்ளனர்.

click me!