அதே கம்பீரத்துடன் வருவேன்... பார்த்திபனை நம்பிக்கையோடு அனுப்பி வைத்த விஜயகாந்த்!

Published : Aug 29, 2018, 04:12 PM ISTUpdated : Sep 09, 2018, 07:33 PM IST
அதே கம்பீரத்துடன் வருவேன்... பார்த்திபனை நம்பிக்கையோடு அனுப்பி வைத்த விஜயகாந்த்!

சுருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த பிறந்த வாழ்த்து தெரிவிக்க சென்ற பார்த்திபனிடம் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என கூறியுள்ளார். கடந்த 25-ம் தேதி அவருக்கு 66-ம் பிறந்தநாளை கொண்டாடினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த பிறந்த வாழ்த்து தெரிவிக்க சென்ற பார்த்திபனிடம் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என கூறியுள்ளார். கடந்த 25-ம் தேதி அவருக்கு 66-ம் பிறந்தநாளை கொண்டாடினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மீண்டும் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். 

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் விஜயகாந்தை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவருக்கு பிறந்த நாள் பரிசும் வழங்கினார். அதில் பரிசாக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். அப்போது அவரது உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். 

இது தொடர்பாக அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பகிர்ந்துள்ளார். அதில் புகைப்படம் மற்றும் முன் தினம் தளபதி, நேற்று நம்மவர், இன்று கேப்டன். அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என நம்பிக்கை அளித்தார் என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!