சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவில் மாற்றம்... அடித்து கூறும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ..!

By vinoth kumarFirst Published Feb 3, 2020, 12:19 PM IST
Highlights

தற்போது அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்க கூடியதாக உள்ளது. சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. நான் எம்.எல்.ஏ ஆவதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா. அவர் சிறையில் இருந்து வந்து என்னை அழைத்தால் நான் சென்று பார்ப்பேன். ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, எம்எல்ஏ தனியரசு கூறியிருந்த நிலையில் தற்போது கருணாசும் அதே கருத்தை முன்வைத்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது என முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார். 

புதுக்கோட்டை வந்த நடிகர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடிகர் சங்கப் பிரச்சனையில் ஜசரி கணேசன் எங்கள் அணியை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், அவருக்குத்தான் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. வாக்களிப்பதற்காகச் சங்கத்து உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது யார் என்று அனைவருக்கும் தெரியும் என்றார். 

ஐசரி கணேசன் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. தனி நபர்கள் யாரும் சொந்தம்கொள்ள முடியாது. எங்களின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். தற்போது, நடிகர் சங்கம் முடங்கிப்போய் உள்ளது. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட தேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கத்தில் பணம் இல்லை என்று கூறினார். 

click me!