சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார்.. கொளுத்தி போட்டு ஆளுங்கட்சியை கதறவிடும் கதர்சட்டை எம்.பி..!

Published : Dec 11, 2020, 04:05 PM IST
சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார்.. கொளுத்தி போட்டு ஆளுங்கட்சியை கதறவிடும் கதர்சட்டை எம்.பி..!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை நம்பவில்லை. பாஜகவினரையே நம்புகிறார் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை நம்பவில்லை. பாஜகவினரையே நம்புகிறார் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம்;- சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை சசிகலாவிடம் சென்றுவிடும். அவர் தேர்தலில் நிற்க முடியாவிட்டால் பொறுப்புகள் அனைத்தும் டிடிவி.தினகரன் வசம் சென்றுவிடும்.

ரஜினியின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளன. முழுக்க முழுக்க பாஜகவின் சாயலாக ரஜினி செயல்படுகிறார் என்பது அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு மட்டும் தான் போட்டி. திமுக கூட்டணியில் புதிதாக அரசியல் கட்சிகள் சேர வாய்ப்புள்ளது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!