"முடியவே முடியாது".... மறுக்கும் சசிகலா – கெஞ்சும் நிர்வாகிகள்

First Published Dec 17, 2016, 4:13 PM IST
Highlights


அதிமுகவின் முகமாக விளங்கிய ஜெயலலிதா கடந்த டிச.5 அன்று மறைந்த போது தமிழக அரசியலில் பெரிய மாற்றம் உருவானது. தமிழக அரசியலே மாறிப்போனது. பெரிய மாயையே விலகியது போல் அரசியல் மாற்றங்கள் வர ஆரம்பித்துள்ளது.

முதல்வர் சிறையில் இருந்தபோது அழுதுகொண்டே பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர் மறைவுக்கு பின்னர் முகத்தில் எந்த சலனமில்லாமல் பதவி ஏற்றதை நாடு கண்டது.

அனைவர் வாயிலும் அம்மா என்பது மறைந்து சின்னம்மா என்ற உச்சரிப்பே மேலோங்கி நின்றது. அம்மாவால் மட்டும் வெற்றி அல்ல இரட்டை இலையாலும் வெற்றி கிடைத்த்து என்று பிளேட்டை மாற்றி போட்டு ஆவடி குமார், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் தைரியமாக பேசதுவங்கினர்.

முதல்வர் ஜெயலலிதாவை தூக்கி வானத்து சந்திரனுக்கு அடுத்த இடத்தில் வைத்து பவ்யம் காட்டியவர்கள் எல்லோரும் அவரை சுத்தமாக மறந்து சின்னம்மா என்கிற தாரக மந்திரத்தை ஒலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பொதுவாக ஒருகட்சித்தலைவர் மறைந்தால் அடுத்த தலைமைக்காக கட்சிக்குள் பெரிய சலசலப்பு எழும் நேருவின் மறைவுக்கு பிறகு லால்பகதூரோ , காமராஜரோ தலமை பதவிக்கு வர முடியவில்லை. நிஜலிங்கப்பா போன்றவர்கள் முயன்றும் முடியவில்லை.

ஆனால் பலத்த சலசலப்பு கட்சிக்குள் எழுந்தது. அண்ணா மறைவுக்கு பின்னர் பெரிய சலசலப்பு எழுந்த்து. எம்ஜிஆர் என்ற மனிதரின் உதவியோடு நாவலரை பின்னுக்கு தள்ளி கருணாநிதி வரமுடிந்தது.

அதிமுகவிலேயே எம்ஜிஆருக்கு பிறகு கட்சி பெரிதாக ஜா, ஜெ என பிளவுபட்டு அதன் பின்னரே ஒன்றிணைந்த்து.

ஆனால் ஜெயல்லிதா என்கிற பெரிய சக்தி மறைவுக்கு பின்னர் கட்சி உடையும் என எதிர்பார்த்தவர்கள் மத்தியில் அனைவரும் கார்டனை நோக்கி ஓடி நீங்கள் தான் சின்னம்மா பதவி ஏற்கவேண்டும் என வலியுறுத்திய போது அனைத்து ஆட்களையும் ஆளுகின்ற சக்தியாக சசிகலா உயர்ந்து நிற்பதை காண முடிந்தது. பொதுவாக ச்சிகலா மீது வந்த விமர்சனம் , ஜெயலலிதாவே கட்சியை விட்டு நீக்கி சேர்த்தது போன்ற காரணங்களை வைத்து பார்க்கும் போது அவருக்கு எதிராக தான் நிர்வாகிகள் கிளம்பி இருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது வேறு. இதை வைத்து பார்க்கும் போது சசிகலாவின்  தனிப்பட்ட திறமை தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஜெயல்லிதாவின் பல அசைவுகளுக்கு பின்னால் சூத்ரதாரியாக சசிகலா இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

கட்சி நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக அவரை தூக்கி பிடிக்கும் போது அது உண்மையோ என்று எண்ண தோன்றுகிறது. மறுபுறம் எல்லாமே ஜெயலலிதாவாக இருந்த லட்சோப லட்ச தொண்டர்கள் சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர் என்பதே யதார்த்தம்.

கட்சிக்காக , பதவிக்காக நிர்வாகிகள் நிலையை மாற்றியுள்ளனர். ஆனால் தொண்டர்கள்  எளிதில் மாற்றிகொள்ள தயாராக இல்லை. கட்சியை காப்பாற்ற சசிகலாதான் என்ற முடிவில் வந்து நிர்வாகிகள் நெருக்கினாலும் சசிகலா அதை ஏற்காமல் மறுத்துவருவதாக கூறப்படுகிறது.

கட்சியின் பொதுச்செயலாளராக ச்சிகலாவுக்கு தமிழகம் முழுதும் பரவலாக எதிர்ப்பு உள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் போட்டுள்ளதால் தான் பொதுச்செயலாளராக வர வேண்டுமென்றால் அது அனைவரின் உள்ளன்போடு இருக்க வேண்டும் என ச்சிகலா நிர்வாகிகளிடம் கூறி வருகிறாராம்.

ஆனால் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சசிகலா பொதுச்செயலாளராக வரவேண்டும் எனபதில் பிடிவாதமாக உள்ளனராம்.

இதனால் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மூலம் தீர்மானம் போட்டு அதை செயற்குழுவில் வைத்து உங்களை அழைக்கிறோம் என நிர்வாகிகள் கூறியும் தொடர்ச்சியாக ச்சிகலா மறுத்து வருகிறாராம்.

 தொண்டர்களின் மன ஓட்டத்தை மாற்ற வேண்டும் கட்சியை காப்பாற்ற சசிகலாதான் வரவேண்டும் என்ற பிரச்சாரத்தை வலுவாக கொண்டு சென்று ஒரு மாற்றம் வந்தால் தான் பொதுச்செயலாளர் பற்றி யோசிப்பேன் என்று சசிகலா சொன்னதால் தான் அவரது அறிவிப்பு தள்ளி போகிறதாம். 

click me!