
டி.டி.வி.தினகரன் மீது கடும் நடவடிக்கை ……தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி உறுதி அளித்தாக சசிகலா புஷ்பா அதிரடி பேட்டி….
தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட டி.டி.வி.தினகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் உறுதி அளித்துள்ளதாக அவரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்தார்
டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று சென்றார். அங்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை அவர் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறானது என்றும். ஜனநாயக முறையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அவரிடம் புகார் அளித்தாக தெரிவித்தார்.
மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு நான் மனுதாக்கல் செய்ய சென்றபோது நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் தலைமை தேர்தல் கமிஷனரிடம் தெரிவித்தாக சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
சசிகலாவை ஜெயலலிதா மன்னித்தாரே தவிர, அடிப்படை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அடிப்படை உறுப்பினர் அட்டையை அவர் காண்பிப்பது செல்லாது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறினார்.
தற்போதும் தான் அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பதவிகளில் நீடிக்கிறேன். தனது பதவிகள் பறிக்கப்படவில்லை என்பதையும் நசீம் ஜைதியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் செய்த முறைகேடு புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவர் மீதும், முறைகேடுகளில் ஈடுபட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தேர்தல் கமிஷனரிடம் கேட்டேன்.
அப்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாக
சசிகலா புஷ்பா எம்.பி. கூறினார்.