சச்சின்-23, நடிகை ரேகா-18 …..மாநிலங்கள் அவையில் மோசமான வருகை

First Published Apr 11, 2017, 11:35 PM IST
Highlights
sachin and rekha


சச்சின்-23, நடிகை ரேகா-18 …..மாநிலங்கள் அவையில் மோசமான வருகை

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்கள் அவைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்தே மிகக்குறைந்த நாட்களே அவைக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மாநிலங்கள் அவையில் மொத்தம் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். 2012ம் ஆண்டு 2 எம்.பி., 2014ம் ஆண்டு ஒரு எம்.பி, 7 எம்.பிகள் 2016ம் ஆண்டு, மற்ற எம்.பி.களை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.

இதில் 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் 23 முறையும், நடிகை ரேகா 18 முறையும் மட்டுமே அவைக்கு வந்துள்ளனர். இதில் நடிகை ரேகா ஒருநாளுக்கு அதிகமாக கூட்டங்களில் பங்கேற்றது இல்லை என்று பேக்ட்லி.இன் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் அவைக்கு நியமன உறுப்பினர்களில் மிகக்குறைவான நாட்கள் வந்ததில் ரேகாவே முதலிடம் பெறுகிறார்கள். இவருக்கு செலவு , ஊதியம் உள்ளிட்டவற்றில் அரசு ரூ.65 லட்சமும், சச்சினுக்கு ரூ. 58.8 லட்சமும் அரசு செலவு செய்துள்ளது.

மேலும் மாநிலங்கள் அவைக் கூட்டத்தில் 18 முறை கலந்து கொண்ட நடிகை ரேகா ஒரு முறை கூட கேள்வி எழுப்பியதில்லை. அதேசமயம், சச்சின் டெண்டுல்கர் 22 கேள்விகள் வரை கேட்டுள்ளார்.

நடப்புக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால், “மாநிலங்கள் அவைக்கு நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுகல்கரும், நடிகை ரேகாவும் அவைக்கு வருவதே இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

click me!