"வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது தாக்கினார்கள்" - சசிகலா புஷ்பா பேட்டி?

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
"வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது தாக்கினார்கள்" - சசிகலா புஷ்பா பேட்டி?

சுருக்கம்

வேட்பு மனு தாக்கல் செய்த போது தங்கள் தரப்பினரை தாக்கியதாக சசிகலா புஷ்பா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று பிற்பகலில் சசிகலா புஷ்பாவின் கணவரும் ,  வழக்கறிஞர்கள் மற்றும் சிலரும் அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.  அவர்கள் வரும் தகவலறிந்து அங்கு ஏற்கனவே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் காயமடைந்தார். 

அவரை போலீசார் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர், பின்னர் அவர் பாதுகாப்பாக மைலாப்பூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார். அவர் மீது ஆதரவாளர்களுடன் அத்துமீறி கட்சி அலுவலக்த்தில் நுழைந்ததாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனிடையே கட்சி அலுவலகத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா புஷ்பா வந்தாரா ? அவர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. 

இதனிடையே சசிகலா புஷ்பா பிபிசிக்கு பேட்டி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காகத்தான் எனது வழக்கறிஞர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். 

நாளை ரகசிய முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதாக நாங்கள் அறிந்தோம். எனது வேட்புமனு, எனது வழக்கறிஞரின் வேட்புமனு மற்றும் மும்பையை சேர்ந்த மற்றொரு நபரின் வேட்புமனு ஆகியவற்றை தாக்கல் செய்ய சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

TN Politics: 60 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்.. ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்!
TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!