
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்ம உள்ளது என சசிகலா புஷ்பா எம்பி உள்ளிட்ட சிலரும் அதிமுக தொண்டர்களில் பெரும்பலோனோரும் ஆரம்பம் முதலே கூக்குரல் இட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கராத்தே வீரரான ஹுசைனி ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் திட்டமிட்டு கொலை செய்யபட்டார் என்று ஹுசைனி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து 2014 ஆம் ஆண்டே தாம் முதல்வர் ஜெ.வுக்கு 40 பக்க கடிதம் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் சிபிஐ விசாரணைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஹுசைனியின் இந்த பேட்டியை சன் நியூஸ் தொலைக்காட்சி தவிர வேறு எந்த நியூஸ் சேனலிலும் ஒளிபரப்பாதது குறிப்பிடத்தக்கது.